5 இந்திய சிறுவர்களை கடத்தி இந்தியாவை சீண்டும் சீன ராணுவம்! – காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகவல்!

ரஷ்யாவில் சீன பாதுகாப்பு அமைச்சர்களை ராஜ்நாத் சிங் சந்தித்த அதே வேளையில் 5 அருணாச்சல பிரதேச சிறுவர்களை சீன ராணுவம் கடத்தியுள்ளது.
இந்தியா சீனா இடையே வர்த்தகம் மற்றும் எல்லை பிரச்சனையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாடு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவின் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யாவில் சென்று ரஷ்ய மற்றும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர்களை சந்தித்து பேசியுள்ளார். இதனை தொடர்ந்து சீனாவின் பி.எல்.ஏ (மக்கள் விடுதலை இராணுவம்) அருணாச்சல பிரதேச பகுதியில் உள்ள மேல் சுபன்சிரியின் நாச்சோ எனும் இடத்தை சேர்ந்த 5 சிறுவர்களை கடத்திச் சென்றுள்ளது.
ரஷ்ய மற்றும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர்களை ராஜ்நாத் சிங் சந்தித்த அதே நேரத்தில் இது சம்பவம் நடந்துள்ளது. பி.எல்.ஏவின் நடவடிக்கை வாயிலாக இந்தியாவுக்கு சீன ராணுவம் எச்சரிக்கை செய்தியை அனுப்பியுள்ளது என காங்கிரஸ் எம்.எல்.ஏ நினோங் எரிங் தெரிவித்துள்ளார்.