மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை !

வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
இன்று முதல் 23ஆம் தேதி வரை மாலத்தீவு லட்சத்தீவு பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். நாளை முதல் கேரள கடலோர பகுதிகள் , மத்திய கிழக்கு அரபிக்கடல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லார் 13 சென்டிமீட்டர், மடத்துக்குளம் 9 சென்டிமீட்டர், கோபிசெட்டிபாளையம் குமாரபாளையம் ,சோலையார் ஆகிய இடங்களில் தலா 7 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது