ஐதராபாத் அருகே ஓரே இடத்தில் 30 குரங்குகள் இறப்பு!! விஷம் கலந்த உணவா??

ஐதராபாத் அருகே 30 குரங்குகள் கூட்டமாக இறந்திருப்பதால் அவை விஷம் கலந்த பொருள் எதையாவது சாப்பிட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம் ஹில்லாக் கிராமத்தில் வனத்துறையினர் 30-க்கும் மேற்பட்ட குரங்குகள் இறந்து கிடப்பதை அறிந்து விசாரணை மேற்கொண்டனர். கிராமத்தின் அருகில் உள்ள குன்றின் மேல் இந்த குரங்குகள் இறந்து கிடந்தன. அவற்றின் உடல் மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததால் பிரேத பரிசோதனை நடத்த முடியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

குரங்குகள் கூட்டமாக இறந்திருப்பதால் அவை விஷம் கலந்த பொருள் எதையாவது சாப்பிட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. விவசாயிகள் யாராவது தங்கள் பயிர்களை காப்பதற்காக விஷம் வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் கிராமத்திலும், சுற்றுவட்டாரங்களிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x