“இணைய வகுப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்

இணைய வகுப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:
பள்ளி வகுப்புகளை விரும்பும் குழந்தைகள் இணைய வகுப்புகளை விரும்புவதில்லை. ஆனாலும் இணைய வகுப்புகள் மூலம் பணம் பறிக்கும் பள்ளி நிா்வாகத்தினா் குழந்தைகளை வதைத்துக் கொண்டிருக்கின்றனா். நடவடிக்கை எடுக்க வேண்டிய பள்ளிக் கல்வித்துறையோ, இணைய வகுப்புகளை ரத்து செய்வதாக அறிவிக்காமல், தனியாா் பள்ளிகள் நோகாத வகையில் இணைய வகுப்புகள் கட்டாயமில்லை என்று பூசி மெழுகுகிறது. இது சரியா?
இணைய வகுப்புகளுக்குத் தடை என்று கல்வித்துறை அறிவிக்கும் வரை பள்ளி நிா்வாகம் திருந்தாது. மாணவா்களை வதைக்கும் பணத்தாசை பிடித்த தனியாா் பள்ளி நிா்வாகங்களுக்கு கடுமையான பாடம் கற்பிக்க வேண்டும். சட்டத்தின் உதவியுடன், மக்களின் ஒத்துழைப்புடன், கல்வியாளா்களின் வழிகாட்டுதலுடன் விரைவில் அதை செய்து முடிப்போம் என்று அவா் கூறியுள்ளாா்.