பாக்கெட் சாராயம் விற்றவர்களை, விறகு கட்டையால் விரட்டியடித்த கிராமத்து பெண்கள்!

நாகப்பட்டிணத்தில் சட்டத்திற்கு புறம்பாக பாக்கெட் சாராயம் விற்ற கும்பலை கிராமத்து பெண்கள் விறகு கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக காரைக்காலில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக பாக்கெட் சாராயங்களை கடத்தி வந்து நாகப்பட்டிண மாவட்ட எல்லை கிராமங்களில் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் நேற்று கீள்வெளூர் ஆனைமங்கலம் பகுதியில் இளைஞர்கள் சிலர் முறைகேடாக பாக்கெட் சாரயத்தை காரைக்காலில் இருந்து கடத்தி விற்று வருவது அந்த பகுதியில் உள்ள கிராமத்தினருக்கு தெரிய வந்துள்ளது. உடனடியாக விறகு கட்டைகளோடு விரைந்த அந்த கிராமத்து பெண்கள் சாராயம் விற்ற இளைஞர்களை அடித்து விரட்டியுள்ளனர்.

இதுகுறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சாராயம் விற்ற நான்கு பேரை கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்தது. கொரோனாவால் வேலை இல்லாமல் உள்ள சில இளைஞர்கள் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x