“கொரோனா இன்றும் குறைய தொடங்காத ஒரேநாடு இந்தியா: மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” – ராமதாஸ்

கொரோன பரவத் தொடங்கி இன்றும் குறைய தொடங்காத ஒரே நாடு இந்தியாதான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்: கொரோனா தினசரி பாதிப்புகள் அமெரிக்காவில் 28,561 ஆகவும், பிரேசிலில் 17,330 ஆகவும் குறைந்து விட்டது. ஆனால், இந்தியாவில் 89,852 ஆக அதிகரித்து விட்டது. உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட 2.47 லட்சம் தொற்றுகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் ஏற்பட்டவை. கொரோனா பரவ தொடங்கி 5 மாதங்களுக்கு மேலாகியும் இன்றும் குறைய தொடங்காத ஒரே நாடு இந்தியாதான்.

எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மக்கள் இதை கருத்தில் கொண்டு மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x