கிணற்றில் விழுந்த தங்கை… காப்பாற்ற சென்ற அண்ணன் உட்பட மூவர் பலி!

நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே கிணற்றில் விழுந்த தங்கையை காப்பாற்ற சென்ற அண்ணன் உட்பட மூவர் மூன்று பேர் கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
பந்தலுார் அருகே தேவாலா வடமூலா பகுதியை சேர்ந்தவர் சுகன்யா(22). இவர் தனது வீட்டிற்கு அருகேயுள்ள வனத்துறை நர்சரிக்கு பயன்படுத்திய பாழடைந்த கிணற்றில் விழுந்துள்ளார். தகவலறிந்த அவரது அண்ணன் தமிழழகன் (24) பதறிப்போய் தனது உடலில் கயிற்றை கட்டிக்கொண்டு, தங்கையை காப்பாற்ற கிணற்றில் குதித்துள்ளார்.
இருவரும் வெளியே வராத நிலையில், அவர்களின் உறவினர் முரளீதரன் (23) அவர்களை காப்பாற்ற கிணற்றில் குதித்துள்ளார். அவரும் வெளியேறாத காரணத்தால் கூடலுார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி, நீண்ட நேர தேடலுக்கு பின், இரவு மூவர் உடலையும் மீட்டனர்.
சம்பவம் பற்றி போலீசார் கூறுகையில், சுகன்யா தற்கொலை நோக்கில் கிணற்றில் குதித்தாரா விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு பின் காரணம் தெரிவிக்கப்படும்’ என்றனர். அடுத்தடுத்து மூவர் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.