நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று தற்கொலை செய்து கொண்ட மதுரை மாணவி!
நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் தேர்வு அச்சம் காரணமாக இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
மருத்துவப் படிப்பில் சேர நீட் எனும் புதிய தேர்வை அறிவித்தது பாஜக அரசு. அதற்கு நாடு முழுதும் கல்வியாளர்களும் அறிஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும் அதைத் திரும்பப் பெறவில்லை. இதனால் தமிழகத்தில் பல திறமை வாய்ந்த மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் அவலம் தொடர்கிறது.
நீட் தேர்வு தொடங்கிய ஆண்டிலிருந்து தற்கொலை செய்து கொண்ட அனிதா முதல் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தேர்வின் அழுத்தம் தாங்காமல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட விக்னேஷ் வரை நீட் தேர்வின் கோர முகம் அனைவரையும் கொதிப்பும், கோபமும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி வந்துள்ளது.
அந்த அதிர்ச்சியிலிருந்து தமிழக மாணவர்கள் மீளாத நிலையில் நீட் தேர்வு நாளை (செப்டெம்பர் 13) நடக்கவிருக்கும் நிலையில் மதுரையில் இன்னொரு மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் முருகசுந்தரம். இவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஜோதி துர்கா(19) நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார். இவர்களது குடும்பம் 6வது சிறப்பு பட்டாலியன் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை வரை தேர்வுக்கு படித்துள்ளர். தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மேலும் அவர் தற்கொலைக்கு முன் பேசிய ஆடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.அந்த ஆடியோவில், எல்லோருமே என்கிட்ட ரொம்ப எதிர்ப்பார்த்தீங்க .ஆனா எனக்குதான் பயமா இருக்கு இது என்னுடைய முடிவு . இதற்கு யாரும் காரணமல்ல ஐ லவ் யூ அம்மா என்று உருக்கமாக ஆடியோவில் பேசியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ரிசர்வ் லைன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இரியன்