பெட்ரோல் பங்க்குகள் கூடுதலாக 2 மணி நேரம் இயங்க அனுமதி அளித்த தமிழக அரசு!

தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகள் இரவு 10 மணி வரை இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் கடந்த மாதம் வரையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், ஞாயிற்றுக்கிழமை உட்பட எந்த நாளும் முழு பொதுமுடக்கம் இல்லை என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். அதே போல மருத்துவக் குழுவின் பரிந்துரையின் படி மால்கள், வழிபாட்டு தலங்கள், பூங்காக்கங்கள், பேருந்துகள், ரயில்கள் என அனைத்து சேவைக்கும் அரசு அனுமதி அளித்தது.

இந்த நிலையில், பெட்ரோல் பங்க்குகள் இரவு 10 மணி வரை இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படும் என அரசு அறிவித்திருந்தது. தற்போது பெட்ரோல் பங்க்குகளின் விற்பனை நேரத்தை தமிழக அரசு நீடித்துள்ளது. அதன் படி, இனிமேல் பங்க்குகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x