ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பாதுகாப்பானது தான்!! தடுப்பூசிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்..

இங்கிலாந்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்தில் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. ஆனால், இங்கிலாந்தில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒரு நபருக்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பக்கவிளைவு காரணமாக இங்கிலாந்து நாட்டில் இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வை இங்கிலாந்து சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டு வந்தது. இந்த ஆய்வின் முடிவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை செய்ய பாதுகாப்பானது என தெரியவந்தது. இதனால், ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், தடுப்பூசி பரிசோதனைக்கான தடை நீக்கப்பட்டதையடுத்து, இங்கிலாந்தில் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனையை மீண்டும் தொடங்கியுள்ளது.

மீண்டும் பரிசோதனை தொடங்கப்பட்டதையடுத்து, ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்த தடுப்பூசி மிகவும் முக்கிய இடத்தை பிடிக்கும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x