13-ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அறிவிப்பு

2021-ம் ஆண்டு துவக்கத்திலிருந்தே கொரோனா தடுப்பூசி போடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வருகிற 13ஆம் தேதி முதல் நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இது பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே போனஸ் செய்தியாக அமைந்துள்ளது.
முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணியை முடிந்த அளவிற்கு நாடுமுழுவதும் எவ்வளவு பேருக்கு செலுத்தமுடியுமோ அதை செலுத்திமுடிக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அதன்படி நாடுமுழுவதிலும் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசிகளை எப்படி கொண்டுசெல்வது, யார் யாரெல்லாம் எந்தெந்த நாட்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கான பட்டியல்களையும் மத்திய அரசு தயாரித்திருக்கிறது.
இதுகுறித்து மாநில வாரியான விவரப் பட்டியல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.