சஸ்பென்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் குதித்த எம்.பி.க்கள்!

மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதற்காக சஸ்பென்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மாநிலங்களவையில்  அமளியில் ஈடுபட்ட 8 எம்.பி.க்களை மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு இன்று காலை சஸ்பெண்ட் செய்தார்.

இதனை அடுத்து அந்த எட்டு எம்பிக்களும் மாநிலங்களவையில் இன்று அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது ஆனால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 மாநிலங்களவை உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற மறுப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்பிகளும் குரல் கொடுத்ததால் உறுப்பினர்களிடையே தொடர் அமளி ஏற்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x