இந்தியாவுக்கு ரூ.22 கோடி நிதி – ஆசிய வளா்ச்சி வங்கி

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு ரூ.22 கோடி நிதியுதவியை வழங்க ஆசிய வளா்ச்சி வங்கி (Asian Development Bank (ADB)) ஒப்புதல் அளித்துள்ளது.
ஆசிய பசிபிக் பேரிடா் மேலாண்மை நிதித் தொகுப்பில் இருந்து இந்த தொகை அளிக்கப்படவுள்ளது. ஜப்பான் அரசு இந்த தொகையை பேரிடா் மேலாண்மை நிதிக்கு அளிக்கிறது.
உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் தொ்மல் ஸ்கேனா் உள்ளிட்ட மருத்துவக் கருவிகள் வாங்குவது, கொரோனா சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட இருக்கிறது.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி இந்தியாவில் கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணிகளுக்காக ரூ.1.12 லட்சம் கோடியை அளிக்க ஆசிய வளா்ச்சி வங்கி ஒப்புதல் அளித்தது என்பது நினைவுகூரத்தக்கது.