தமிழகத்துக்குள் படையெடுத்து வந்த 130 யானைகள்… விவசாயிகள் கலக்கம்!

கர்நாடகாவிலிருந்து 130 யானைகள் தமிழகத்திற்குள் நுழைந்திருப்பதால் எல்லையோர கிராமங்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவை இரண்டு மந்தைகளாக தமிழகத்திற்குள் நுழைந்துள்ளதாக ஜவலகிரி வனத்துறை அதிகாரி என்.நாகராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து தல்லி, ஜவலகிரி கிராம மக்களை சந்தித்து பேசினார்.

கிராம மக்கள் இரவு நேரங்களில் தங்கள் வயல்களுக்கும், தோட்டங்களுக்கும் பாதுகாப்புக்குச் செல்ல வேண்டாம். கால்நடைகளை வனங்களை ஒட்டி மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம். வனத்துறை ஊழியர்கள் இரவு நேரங்களில் காடுகளுக்குள் செல்ல வேண்டாம்’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களில் ராகி மற்றும் குதிரைவாலி பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இவை யானைகளுக்கு பிடித்த உணவு என்பதால் அவற்றை உண்பதற்காக அவை தமிழகம் வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x