ரூ.7,926 கோடி வங்கி ஊழல்..! ஹைதரபாத் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு

ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவன இயக்குனர்கள் மீது ரூ. 7,926 கோடி நிதி மோசடி வழக்கில், சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் இதுவரை மாபெறும் வங்கி மோசடியாக வைர வியாபாரி நீரவ் மோடியின் ஊழல் இருந்துவந்தது. தற்போது அதனை மிஞ்சும் அளவிற்கு டிரான்ஸ்ட்ராய் இந்தியா எனும் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

ஹைதரபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் டிரான்ஸ்ட்ராய் இந்தியா. இந்நிறுவனம் கனரா வங்கியின் உதவியுடன் சுமார் 7,926 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துள்ளது.

இதையடுத்து, நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான செருகுரி ஸ்ரீதர், கூடுதல் இயக்குனர்கள் ராயபதி சாம்பசிவ ராவ், அக்கினேனி சதீஷ் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x