போலீசாருக்கு பயிற்சி அதிகரிக்கப்பட வேண்டியுள்ளது – டிஜிபி

குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும் போலீஸ்காரர்களுக்கான பயிற்சியை அதிகரிக்கப்பட வேண்டியுள்ளது என தமிழக காவல் துறை டி.ஜி.பி., திரிபாதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ரவுடி துரைராஜ் என்பவனை கைது செய்ய முயன்ற போது நாட்டு வெடிகுண்டை வீசினான். இதில் காவலர் சுப்பிரமணி உயிரிழந்தார். தமிழகத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
உயிரிழந்த காவலர் சுப்பிரமணி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த டிஜிபி திரிபாதி தூத்துக்குடி வருகை தந்தார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒரு சில சம்பவங்களை வைத்து, தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரித்து விட்டதாக கூறப்படுவதை ஏற்க முடியாது. போலீசாருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இன்னும் பயிற்சி அதிகரிக்கப்பட வேண்டியுள்ளது என்று கூறினார்.