“கலவரத்தை தூண்டு… 50 ஆயிரம் தருகிறோம்…” பீஜேபீ-யின் புது டெக்னிக்

தமிழகத்தில் பீஜேபீ கட்சி எப்படியாவது கவனத்தை பெற்று வலுவாக கட்சியாக மாறவேண்டும் என்று பல முயற்சிகளை செய்து வருகிறது. சமீப காலங்களாக, தமிழகத்தில் உள்ள முக்கியத்தலைவர்களின் சிலைகளுக்கு காவிச்சாயம் பூசுவது, காவித்துண்டு போர்த்துவது போன்ற வேலையில் பீஜேபீ கட்சியினர் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.

கோவையில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டதுடன், புதுச்சேரியில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு போர்த்தப்பட்டது. இதேபோல், பேரறிஞர் அண்ணா, திருவள்ளுவர் சிலைகளுக்கும் காவித்துணிகள் அணியப்பட்டன. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. தமிழக முதல்வர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கடுமையாக பீஜேபீ கட்சியினரை விமர்சித்தனர்.

இந்நிலையில், பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசிய நபரின் குடும்பத்துக்கு பீஜேபீ கட்சி, 50 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது.


பெரியார் சிலைக்கு காவி பூசிய குற்றவாளியான அருண் என்பவரது பெற்றோர் இந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டனர்.  பீஜேபீ தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக 50ஆயிரம் நிதி வழங்கப்பட்டதாக அதன் தலைவர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்வினைகள் கடுமையாக எழுந்துள்ளன. இதுதொடர்பாக கனியன் என்பவர் கூறுகையில், “ அறிவு இல்லாத பண்டாரங்களை தவறு செய்ய தூண்டி, அவர்களுக்கு பணம் தரும் வேலையை பீஜேபீ செய்கிறது. இந்த இளைஞர்கள் இதுபோன்ற கலவரங்களில் ஈடுபட வேண்டும் என்பது பீஜேபீயின் நோக்கம். அதனாலேயே இவர்கள் ஊக்கத்தொகை வழங்குகிறார்கள். இதில் விளம்பரம் வேறு.” என்று காட்டமாக கனியன் பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x