மனைவியின் கண்முன்னே, கணவர் மற்றும் அவரது மகள் வெட்டி கொலை!!

ஒடுகத்தூர் அருகே மனைவியின் கண்முன் கணவர் மற்றும் அவரது மகள் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக உறவினர்கள் உட்பட 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த கண்டிபுதூர் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (42). இவரது மனைவி பாஞ்சாலை (38),  மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர்களது மகன்கள் ராஜேந்திரன் (26), ராஜேஷ் (18), மகள் தீபா (10). பொன்னுசாமி, 25 ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் வேப்பங்குப்பத்தில் உள்ள அன்ஷர்பாஷா என்பவரது நிலத்தில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். மேலும், ராஜேந்திரன், ராஜேஷ் இருவரும் 5 ஆண்டுகளாக அன்ஷர்பாஷா நடத்தி வரும் இறைச்சி கடையில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், பொன்னுசாமி, பாஞ்சாலை, தீபா ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டிற்குள் கத்தியுடன் புகுந்த மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த பொன்னுசாமியின் கழுத்தில் வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு எழுத்த மகள்  தீபாவையும் வெட்டி உள்ளனர். பாஞ்சாலை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால், எதுவும் தெரியாததுபோல் இருந்துள்ளார். இந்நிலையில் அருகே உள்ள தோட்டத்தில் நேற்று காலை கொய்யாபழங்களை அறுவடை செய்வதற்காக வந்தவர் பொன்னுசாமியை அழைக்க சென்றார்.

அப்போது, பொன்னுசாமி, தீபா ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அன்ஷர்பாஷாவுக்கு தகவல் தெரிவித்தார். அன்ஷர்பாஷா வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் விரைந்து சென்றனர்.

இதையடுத்து, டிஐஜி காமினி, எஸ்பி செல்வகுமார் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து, பொன்னுசாமியின் தங்கை மகன்கள் அண்ணாதுரை(24), குமரேசன்(22)  உட்பட 5 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சொத்து தகராறில் இந்த கொலை நடந்திருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x