நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் திருப்பம் – காதலி தலைமறைவு

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் அவரது காதலி மீது தற்கொலைக்கு தூண்டியதாக பீகார் மாநில போலீசார் வழக்கு பதிந்த நிலையில் தற்போது ரியா சக்ரபார்த்தி தலைமறைவாகியுள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சுஷாந்தின் தந்தை மகனின் காதலில் ரியா மற்றும் சிலர் மீது பீகார் மாநிலம் பாட்னா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள பாட்னா ராஜீவ் நகர் போலீசார், ரியாவை கைது செய்வதற்காக மும்பை விரைந்தனர். இந்த நிலையில் மும்பையில் உள்ள ரியாவின் வீட்டுக்குச் சென்றபோது, அவரைக் காணாததால் ரியா சக்ரபர்த்தி தலைமறைவாகி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதற்கிடையே சுஷாந்த் சிங் குடும்ப வக்கீல் மும்பை போலீசார் ரியா சக்ரபார்த்திக்கு உதவுவதாக குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x