இந்தியாவில் மலட்டுத்தன்மை அதிகரிப்பு?! ஆய்வில் பகீர்!

இந்தியாவில் இளம் தம்பதிகளிடத்தில் மலட்டுத்தன்மை அதிகரித்து வருவதாக, கருத்தரிப்பு ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
சமீப காலமாக, மாறும் வாழ்க்கை முறையினால் பல இளம் தம்பதிகளிடத்தில் மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் நகரங்களில் கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்து வந்துள்ளன. இந்நிலையில், இந்தியன் சோசையெட்டி ஆஃப் ரீப்புரொடொக்சன்(INDIAN SOCIETY OF REPRODUCTION) எனும் ஆய்வு அமைப்பு, மலட்டுத்தன்மை குறித்து நடத்திய ஆய்வில் நகரங்களில் இளம் தம்பதிகளிடையே மலட்டுத்தன்மை அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையில், இந்தியாவில் 10-14% மலட்டுத்தன்மை இருப்பதாக அறிவித்துள்ளது.
நகரங்களில் 6-யில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை இருப்பதாகவும் கூறியுள்ளது. நகரங்களில் இளம் தம்பதிகளிடையே அதிகரித்து வரும் மலட்டுத்தன்மைக்கு, தாமதாக திருமணம் செய்தல் மற்றும் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போடுதல் முக்கிய காறணங்கள் என இந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது. மேலும், பணிச்சுமையால் நிகழும் மன அழுத்தமும், இரவு நேரப்பணியும் இதர காரணங்கள் என தெளிவுபடுத்தியுள்ளது.
நகரங்களில் இளம் தம்பதிகளிடையே அதிகரித்து வரும் மலட்டுத்தன்மைக்கு, தாமதாக திருமணம் செய்தல் மற்றும் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போடுதல் முக்கிய காறணங்கள் என இந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது. மேலும், பணிச்சுமையால் நிகழும் மன அழுத்தமும், இரவு நேரப்பணியும் போன்றவை இதர காரணங்கள் இந்தியன் சொசையெட்டி ஆஃப் ரீப்புரொடொக்சன்