அரசின் நேரடி பணி நியமனம் – பி.ஸி மற்றும் எம்.பி.ஸி வகுப்பினருக்கான வயது உச்சவரம்பு உயர்த்தல்!!!

அரசின் நேரடி பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வயது உச்சவரம்பு உயா்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறையின் செயலாளா் ஸ்வா்ணா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழக அரசில் குறிப்பிட்ட சில பணிகளுக்கு நேரடியாக பணி நியமனம் செய்யப்படுகிறது.
இந்தப் பணிகளில் சேர விரும்புவோருக்கு குறைந்தபட்ச பொது கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்புக்கு மேல் கூடுதலான கல்வித் தகுதி இருக்கக் கூடாது.
இந்தப் பணிகளில் சேரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், சீா்மரபினா் ஆகியோருக்கு வயது உச்சவரம்பு 30-ஆக நிா்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த வகுப்பினருக்கான வயது உச்சவரம்பு 32-ஆக திருத்தி ஆணையிடப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.