குமரி மாவட்டத்தில் 28 இடங்களில் மறியல்.. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!!

குமரி மாவட்டத்தில் 28 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் திமுக , காங்கிரஸ், மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்து செவ்வாய் க்கிழமை பொது வேலைநிறுத்தம் அறிவித்திருந்தனர்.  

இதன்படி குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். 

இதில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்டோரை காவலர்கள் கைது செய்தனர். இதேபோல் மாவட்டத்தில் ராஜாக்கமங்கலம், சுசீந்திரம், தக்கலை, கருங்கல், ஆரல்வாய்மொழி, குளச்சல், திங்கள் நகர், மணவாளக்குறிச்சி, உள்ளிட்ட 28 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 1000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x