ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று!!

ரஷியாவில் முதன்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்புவெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் புதிதாக 14,231 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து,மொத்த பாதிப்பு 13,40,409 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 239 பேர் உள்பட இதுவரை 23,205 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில் தற்போது வரை 10,39,705 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,920 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், இன்றைய நிலவரப்படி 2,77,499 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று பாதித்தோரில் தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 4,573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, பிரேசிலை தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x