‘பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா விருப்பம்’ என்ற தகவலை மறுத்த இந்திய வெளியுறவுத் துறை!!
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்திருப்பதாக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறியிருக்கும் தகவலை இந்திய வெளியுறவுத் துறை மறுத்துள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தையைத் தொடங்க இந்தியா விருப்பம் தெரிவித்து தகவல் அனுப்பியிருப்பதாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யூசுஃப் கூறியது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு அனுராக் ஸ்ரீவஸ்தவா பதிலளித்துள்ளார்.
அவர் கூறுகையில், “அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர விருப்பம் தெரிவித்து புது தில்லியிலிருந்து தகவல் வந்திருப்பதாக பிரதமர் இம்ரான் கானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறியிருப்பது முற்றிலும் தவறான தகவல். பாகிஸ்தான் தரப்பில் கூறப்படுவது போன்ற தகவல் எதையும் நமது தரப்பில் இருந்து அனுப்பவில்லை என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறோம்” என்று இந்திய வெளியுறவு விவகாரத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.