டிக்டாக் தடை சீனாவுக்கு பாதிப்பா? நிபுணர்கள் கருத்து

இந்தியாவில் விதிக்கப்பட்ட டிக்டாக் தடையால் சீனா பாதிக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில், லடாக் பகுதியின் கல்வான் பள்ளத்தாக்கில், இந்தியா சீனாவுக்கு இடையே நடந்த மோதலில், 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இந்தியா- சீனா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, டிக் டாக் உள்ளிட்ட 59 சீன நாட்டு செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
தனிநபர் தகவல் திருட்டு தொடங்கி பல்வேறு பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இந்த செயலிகளுக்கு தடை விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த செயலியை இனி ப்ளே ஸ்டோர், ஆப் ஸ்டோர்களில் தேடினாலும் கிடைக்காது.
இந்தத் தடையை இந்தியர்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர். சீன செயலிகளின் இந்தியப் போட்டி நிறுவனங்களுக்கு இது ஊக்கம் அளித்துள்ளது.
ஆனால், இது எந்த அளவிற்கு சீனாவுக்குத் தலைவலி ஏற்படுத்தும் என்பதில் பொருளாதார வல்லுனர்கள் மாறுபட்டுள்ளனர். சர்வதேச வணிகத்தின் புள்ளி விவரங்களின் படி, சீனாவைத் தான் இந்த உலகம் சார்ந்துள்ளது.
ரெட்மி, ரீயல்மி, மோட்டோ போன்ற சீனாவின் ஸ்மார்ட்போன்கள், இந்தியாவை ஆக்கிரமித்து இருக்கும் நிலையில், இந்த செயலிகளின் தடை சீனாவின் இராட்சச சுயசார்புப் பொருளாதாரத்தை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பது ஒரு கேள்விக்குறியாக அமைந்துள்ளது என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள்.