கேரளாவில் வேகமாக பரவும் கொரோனா: மீண்டும் ஊரடங்கு என முதல்வர் அறிவிப்பு

கேரள மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில், கொரோனா சமூக பரவுதல் தொடங்கியுள்ளதாகவும், பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, நாளை முதல் அந்த பகுதிகளில் முழு ஊரடங்கு செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் சந்திப்பின் போது கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியது:- “ திருவனந்தபுரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் ஏராளமான பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இது சமூக பரவலாக மாறியுள்ளது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.

இந்த கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்போது ஊரடங்கின் அடுத்த கட்டத்திற்கு செல்ல மாநில அரசு தயாராக உள்ளது.

திருவனந்தபுரத்தில் அதிக கட்டுப்பாடுகள் இருக்கும். நாளை முதல் கடலோரப் பகுதிகளில் முழு ஊரடங்கு செயல்படுத்தப்படும்” என்று கேரள முதலமைச்சர் அறிவித்தார்.

இதற்கிடையே கேரளாவில், 791 புதிய கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x