கொரோனா காலத்திலும் ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்ய, 10 கி.மீ. பயணம் செய்யும் 87 வயது அதிசய மருத்துவர்!

கொரோனா காலத்திலும், 10 கி.மீ. மிதிவண்டியில் சென்று கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை செய்த 87 வயது மருத்துவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் சந்திரபூரைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் ராம்சந்திர தனேகர்(87) தனது மிதிவண்டியில் தினமும் 10-15 கிலோமீட்டர் பயணம் செய்து சுகாதார வசதிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள ஏழைகளின் வீடு வீடாக மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்.
இதுகுறித்து மருத்துவர் ராம்சந்திர தனேகர் கூறுகையில், “கடந்த 60 ஆண்டுகளாக, நான் கிட்டத்தட்ட தினமும் கிராமவாசிகளைப் பார்வையிட்டு வருகிறேன். கொரோனா பயம் காரணமாக, நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் எனக்கு அத்தகைய பயம் இல்லை.
Maharashtra: A 87-year old homoeopathic doctor in Chandrapur district braves #COVID19 pandemic to treat villagers. He travels 10 km barefoot on his bicycle daily to provide door-to-door medical treatment to the poor. He has been visiting patients on his bicycle for last 60 years. pic.twitter.com/E9OrHB7uOx
— ANI (@ANI) October 23, 2020
இப்போதெல்லாம், இளம் மருத்துவர்கள் பணத்திற்கு தான் முக்கியத்துவம் அளிக்கிறார்கள், அவர்கள் ஏழைகளுக்கு சேவை செய்ய விரும்பவில்லை. எனது கைகால்கள் வேலை செய்யும் வரை நான் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வேன்” என்று உற்சாகமாக கூறினார்.
கிராமவாசி ஒருவர் கூறுகையில், “அவர் எங்களுக்கு ஒரு கடவுளைப் போன்றவர், எந்த நேரத்திலும் ஒரே அழைப்பில் எங்களை அணுகும் ஒரே மருத்துவர் அவர் தான். மற்றவர்கள் சிகிச்சை அளிக்க மறுக்கும் தொற்றுநோய் காலங்களிலும் கூட அவர் தொடர்ந்து எங்களுக்கு சேவை செய்து வருகிறார்” என கூறினார்.