தீராத வயிற்று வலியா? உடனடி நிவாரணம் இதோ..

வயிற்று வலி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பொதுவான வயிற்று வலி எதனால் ஏற்படுகிறது, அதன் காரணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், வாயு தொல்லை, பூச்சித் தொல்லை, வயிற்றுப் பொருமல், உணவு நச்சு முதலியனவாகும். இது மாதிரியான சாதாரண வயிற்று வலிக்குப் பாட்டி வைத்தியம் குறிப்புகளைப் பார்க்கலாம். இந்தக் குறிப்புகள் குழந்தைகள் முதல் (5+ வயது) பெரியவர்கள் வரை அனைவருக்கும் உதவும். இது தவிர மருத்துவ ரீதியாக பல்வேறு காரணங்கள் வயிற்று வலிக்கு உள்ளன. அது மாதிரியான வயிற்று வலிக்கு இந்த குறிப்புகள் பொருந்தாது.

சீரக நீர்

ஒரு பாத்திரத்தில் ஒரு சொம்பு அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். அதில் கறிவேப்பிலை, இஞ்சி மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொண்டு, நன்கு கொதிக்க விடவும். பின்னர் வடிகட்டியைக் கொண்டு தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். இந்த தண்ணீரை அருந்தி வர, வயிற்று வலி குணமடையும்.

வேப்பம்பூ

வேப்பம்பூவைப் பறித்து வெயிலில் காய வைக்கவும். பின் இதனைத் தூளாகப் பொடித்துக் கொள்ளவும். இதை வெந்நீரில் கலந்து காலை மாலை என இருவேளையும் பருகி வரலாம். இதைச் செய்து வரும் பொழுது வாயு தொல்லையால் ஏற்பட்ட வயிற்று வலி குணமடையும்.

சுக்கு

சோம்பு அரைக் கப், தனியா கால் கப் மற்றும் சுக்கு ஒரு சிட்டிகை என்ற அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மூன்றையும் மிக்சியிலோ அல்லது அம்மியிலோ போட்டு அரைத்து பொடியாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பாத்திரத்தில் ஒரு சொம்பு தண்ணீரை ஊற்றிக் கொண்டு, பொடியைச் சேர்த்து விடுங்கள். இதை நன்கு கொதிக்கவிடவும். அரை சொம்பு அளவிற்குத் தண்ணீர் சுண்டியவுடன், இதில் பனை வெல்லமும் பாலும் சேர்த்து அருந்த வேண்டும். இது மலச்சிக்கலைக் குணமடையச் செய்யும்.

கசகசா

ஒரு தேக்கரண்டி அளவு கசகசா மற்றும் சிறிதளவு பனங்கற்கண்டையும் எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் மிக்ஸியில் அரைத்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.
இதைத் தினம் மூன்று வேளை எடுத்துக் கொள்வதன் மூலம் வயிற்று வலி நிவாரணம் அடையும்.

சுக்கு கருப்பட்டி

சுக்கு கருப்பட்டி மற்றும் நான்கு மிளகுகளை எடுத்துக் கொள்ளவும். இதை உரலில் போட்டு நன்கு இடித்துக் கொள்ளவும். இந்தப் பொடியை இரண்டு வேளை சாப்பிடுவதன் மூலம் வயிற்று வலி குணமடையும்.

சாதம் வடித்த நீர்

அஜீரணக் கோளாறை சரி செய்ய மற்றும் ஒரு எளிய வழி உள்ளது. இதற்குத் தேவையானது ஒரு டம்ளர் அளவு சாதம் வடித்த நீர் ஆகும். இதில் ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் கலந்து பருக வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வயிற்றுத் தொந்தரவு குறையும்.

வெந்தயம்

நெய் விட்டு வெந்தயத்தை வறுத்துக் கொள்ளவும். பின் இதனை நன்கு பொடித்து தூளாக்கிக் கொள்ளவும். இந்தத் தூளை மோரில் கலந்து குடித்து வர வயிற்று வலி சரியாகும்.

குப்பைமேனிக் கீரை

குப்பைமேனிக் கீரையை ஒரு கப் அளவிற்குக் கிள்ளி எடுத்துக் கொள்ளவும். அத்தோடு நான்கைந்து பூண்டு பற்களைச் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதைப் பிழிந்து சாற்றைத் தனியாக வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.இந்த சாற்றைப் பருகி வர வயிற்றில் உள்ள பூச்சிகள் எல்லாம் அழியும். வயிற்றுவலியும் நிவர்த்தி அடையும்.

தேன்

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். இதில் ஒரு தேக்கரண்டி அளவு தேனைக் கலக்கவும். இந்த நீரை அருந்தி வர வயிற்று வலி குணமடையும்.

தண்ணீர்

வயிற்றுக் கோளாறு இருக்கும் சமயத்தில் அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்வது நல்லது. இவ்வாறு தண்ணீர் பருகுவதன் மூலம் வயிற்றில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும். அதனால் வயிற்று வலி சீக்கிரம் குணமாக வாய்ப்புள்ளது.

பாதிரிப் பட்டை

பாதிரிப் பட்டையைத் தண்ணீரில் ஊறவைத்து,அந்த நீரை அருந்துவதாலும் வயிற்று வலி 
சரியாகும். இந்த பாதிரி மரத்தின் பூ வெண் சிவப்பு நிறம் உடையது என்பது குறிப்பிடத் தகுந்தது.

செய்யக் கூடாதது

வயிற்று வலி இருக்கும் சமயத்தில் படுக்கக்கூடாது. அவ்வாறு படுக்கும் பொழுது வயிற்று வலி இன்னும் அதிகமாக வாய்ப்பு உள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x