ஐபில் 2020:பஞ்சாப்யை பந்தாடிய ராஜஸ்தான்!!!பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய போவது யார்?

ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி பஞ்சாப் அணியின் மந்தீப் சிங், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

மந்தீப் சிங் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அடுத்து கேஎல் ராகுல் உடன் கிறிஸ் கெய்ல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்த ஜோடி 14.4 ஓவரில் 121 ரன்கள் எடுத்த நிலையில் பிரிந்தது. கேஎல் ராகுல் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 10 பந்தில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டகெயில் 46 பந்தில் 6 பவுண்டரி, 8 சிக்சருடன் 99 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

உத்தப்பா நிதானமாக ஆட, ஸ்டோக்ஸ்  அதிரடியாக ஆடினார். முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தனர். இதில் ஸ்டோக்ஸ் 3 சிக்சர், 6 பவுண்டரியுடன் அரைசதமடித்து ஆட்டமிழந்தார். அடுத்து சஞ்சு சாம்சன் இறங்கினார்.

நிதானமாக ஆடிய உத்தப்பா30 ரன்னில் அவுட்டானார். அரை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், சாம்சன் 25 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 48 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து ஸ்மித்தும், ஜோஸ் பட்லரும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில், ராஜஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஸ்மித் 31 ரன்னும், பட்லர் 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஆட்ட நாயகன் விருது பென் ஸ்டோக்சுக்கு வழங்கப்பட்டது.

ராஜஸ்தான் பெற்ற 6வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றி மூலம் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் தோற்றாலும் ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x