சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு விமான சேவை நிறுத்தம்

மும்பை, தில்லி, புணே, நாகபுரி, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு ஜூலை 6-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை விமான சேவைகள் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கொல்கத்தா விமான நிலையம் தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
மாகாராஷ்டிரம், தமிழ்நாடு, தில்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. அதிலும் மும்பை, சென்னை, தில்லி ஆகிய நகரங்களில் கரோனா பாதிப்பு தொடா்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டே இந்த விமான சேவை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது.