விக் கழண்டு விழுந்ததால், மணப்பெண் அதிர்ச்சி.. போலீசில் மாட்டிக்கொண்ட வழுக்கைத்தலை கணவன்

வழுக்கை தலையை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதால், அவரின் கணவன் மீது ஒரு மனைவி புகார் கூறியுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த அழகிய இளம்பெண் ஒருவருக்கும், நயா நகர் பகுதியில் வசிக்கும் 29 வயதான ஒரு வசதியான ஆடிட்டருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. அதன் பிறகு அவர்களிருவரும் மீரா சாலையில் உள்ள ஒரு வீட்டில் வசித்தனர். இந்நிலையில் கல்யாணமாகும்போது அந்த மணமகன் ஆடிட்டர் தன்னுடைய வழுக்கை தலையை மறைக்க தலையில் விக் வைத்துக்கொண்டு திருமணம் செய்து கொண்டார். மணமகளும் தன்னுடைய கணவன் தலையிலிருப்பது ஒரிஜினல் முடிதான் என்று நம்பி விட்டார் .
ஆனால் கல்யாணம் முடிந்து, முதலிரவு அன்று திடீரென்று கணவனின் தலையிலிருந்த விக் கழண்டு கீழே விழுந்தது. இதனால் பல கனவுகளை சுமந்து வந்த அப்பெண், திடீரென அதிர்ச்சியடைந்தார். கணவரின் தலையில் வழுக்கை இருப்பதை மறைத்துவிட்டதால், அந்த பெண் கோபமடைந்தார் .அதை பற்றி அவரின் மாமியாரிடம் கேட்ட போது, வழுக்கை தலை எல்லாம் ஒரு பிரச்னையா என்று அலட்சியமாக பேசியுள்ளார். மேலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாதே என்றும் கூறியுள்ளார் .
அது மட்டுமல்லால் அவரின் கணவர் அந்த பெண்ணிடம் இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொள்ளவும் வற்புறுத்தியுள்ளார். இதனால் மனம் உடைந்த அந்த பெண் போலீசில் தன்னுடைய கணவன் மீது தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்