“ஊழல் செய்யும் அதிகாரிகளை தூக்கில் போட வேண்டும்” மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி!!

ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால் தான் லஞ்சம் தடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நெல் கொள்முதலில் முறைகேட்டை தடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கு தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், “நமது நாட்டில் விவசாயம் அநாதையாக்கப்பட்டு வருகிறது. நெல் கொள்முதலுக்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்கவில்லை என நீதிமன்றத்துக்கு தவறான தகவல் அளிப்பது ஏன்? தமிழகத்தில் ஊழல் என்பது புற்றுநோயைப்போல் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்றுக்கொண்டிருக்கிறது.

உரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டால்தான் தடுக்க முடியும். ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரிசெய்யப்படும்.” இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x