பிகார் மக்கள் மாற்றத்துக்குத் தயாராகிவிட்டனர்: ராகுல்

பிகார் பேரவைத் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிகார் மக்கள் மாற்றத்துக்குத் தயாராகிவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.

பிகார் பேரவைத் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடிஹாரில் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

“லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பசியுடனும், தாகத்துடனும், நடந்தே வீடு திரும்பினர். ஆனால், பிரதமர் மோடி அரசு அவர்களுக்கு எவ்வித உதவியும் செய்யாமல் தவிக்கவிட்டது. அவர்கள்தான் தற்போது மக்களிடம் வாக்கு சேகரிக்க வருகின்றனர்.

பிரதமர் மோடியும், முதல்வர் நிதிஷ் குமாரும் பிகாரைக் கொள்ளையடித்துவிட்டனர். மக்கள் இதை உணர்ந்து மாற்றத்துக்குத் தயாராகிவிட்டனர். மகா கூட்டணி அரசு அமையும். குறிப்பிட்ட சாதிக்கான, மதத்துக்கான, வகுப்புக்கான அரசாக அது இருக்காது. ஒட்டுமொத்த பிகாருக்கான அரசாக இருக்கும். ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் அரசு.

வேலைவாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் வாக்குறுதி அளித்தார். ஆனால், மக்களுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. இன்றைக்கும், வாழ்வாதாரத்துக்காக விவசாயிகள் வேறு ஒரு மாநிலத்துக்கு இடம்பெற வேண்டியுள்ளது.”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x