அடுத்த 24 மணி நேரத்தில்,இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு-மக்களே உஷார்!!!

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஈரோடு, கோவை, நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், நீலகிரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், அடுத்த 72 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் கடந்த 24 மணி நேரத்தில் மேட்டுப்பாளையம், (கோவை) 7 சென்டிமீட்டர் மழையும், திருச்சுழி (விருதுநகர்) திருப்பூர், குன்னூர் (நீலகிரி) 5 சென்டி மீட்டர் மழையும் ராஜபாளையம் (விருதுநகர்) 4 சென்டிமீட்டர் மழையும், ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) கெட்டி (நீலகிரி0 அனந்தபுரம் (விழுப்புரம்) தலா 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x