ஐபில் 2020:பெங்களூரை பேக் செய்து அனுப்பிய ஹைதெராபாத்….

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையல் எலிமினேட்டர் சுற்றின் முதல் ஆட்டம் நேற்றுநடைபெற்றது. புள்ளிப்பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடத்தல் உள்ள ஐதராபாத் பெங்களூர் அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் விராட்கோலி 6 ரன்களுக்கும், தேவ்தத் படிக்கல் 1 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். சற்று தாக்குப்பிடித்து ஆடிய ஆரோன் பிஞ்ச் 30 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 32 ரன் எடுத்த நிலையில் நடையை கட்டினார். அடுத்து வந்த மொயீன் அலி (0) அதே ஓவரில் ‘பிரிஹிட்’ பந்தில் ரஷித்கானால் ரன்-அவுட் செய்யப்பட்டார்.

தனி ஆளாக போராடிய டிவில்லியர்ஸ் டிவில்லியர்ஸ் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணி தரப்பில் ஜாசன் ஹோல்டர் 3 விக்கெட்டும், டி.நடராஜன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 132 ரன் இலக்கை நோக்கி களமறங்கிய ஐதராபாத் அணியில் கேப்டன் டேவிட் வார்னர் 17 ரன்னிலும், மனிஷ் பாண்டே 24 ரன்னிலும், பிரியம் கார்க் 7 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 67 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

5-வது விக்கெட்டுக்கு ஜாசன் ஹோல்டர், கேன் வில்லியம்சனுடன் இணைந்தார். வெற்றியை உறுதி செய்தனர். நவ்தீப் சைனி வீசிய கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில், 2 பவுண்டரி அடித்த ஜாசன் ஹோல்டர் வெற்றி இலக்கை எட்ட உதவினார். 19.4 ஓவர்களில் ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கேன் வில்லியம்சன் 44 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ரன்னும், ஜாசன் ஹோல்டர் 20 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 24 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x