கர்நாடகாவில் மாசு குறைவான “பசுமை பட்டாசு”களை வெடிக்கவும், விற்கவும் அனுமதி

கர்நாடகாவில் பசுமை பட்டாசுகளை விற்கவும் வெடிக்கவும் அனுமதிப்பதாக மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை விற்பதற்கும் வெடிப்பதற்கும் அனுமதியில்லை என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா முதலில் அறிவித்திருந்தார். மருத்துவ வல்லுநர்களின் பரிந்துரையின் பேரில் பட்டாசுகளுக்கு தடை விதித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
எடியூரப்பா இந்துக்களுக்கு எதிரான முடிவை எடுத்துள்ளதாக சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் அவர் தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு தீபாவளி பண்டிகையின் போது பசுமை பட்டாசுகளை விற்கவும் மற்றும் வெடிக்கவும் அனுமதி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.