“குழந்தைகளை தவறான வழிக்கு செல்ல வாய்ப்பு அளிப்பது பெற்றோர்களே”!! – போலீஸ் சூப்பிரண்டு பகலவன்

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், பெற்றோர்கள் குழந்தைகளை செல்போனில் விளையாட அனுமதிக்காதீர்கள் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் அறிவுரை கூறியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், பெற்றோர்கள் குழந்தைகளை செல்போனில் விளையாட அனுமதிக்காதீர்கள் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடெங்கும் தற்போது நிலவி வரும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை பல்வேறு மக்கள் தங்களது வாழ்க்கையின் வளர்ச்சி பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் ஒரு சிலரின் அதீத ஆசையும் திரைப்படங்களை பார்த்து உடனடியாக பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்ற பேராசையாலும் ஆன்லைன் சூதாட்டம்
போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவு தாங்கள் நினைத்த பரிசு பொருளை அடைய முடியவில்லையே என்ற மன உளைச்சலில் தாங்கள்
மேற்படி ஆன்லைன் விளையாட்டிற்கு செலவு செய்த பணத்தை ஈட்ட முடியவில்லையே என்ற மன வேதனைக்கும் ஆளாகின்றனர்.

இதன் விளைவு அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மேலும் தமிழகத்தில் இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் கடந்த சில
மாதங்களுக்கு முன்பு சில இடங்களில் நடந்துள்ளது. இதற்கு மேலாக பல வீடுகளில் பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளுடன் விளையாட நேரம் ஒதுக்காமல் அவர்களுக்கு தங்களின் செல்போனை கொடுத்து பழகி குழந்தைகளை தவறான வழிக்கு செல்ல வாய்ப்பு அளிக்கின்றனர்.

பெற்றோரின் செல்போன்களை குழந்தைகளுக்கு கொடுத்து விட்டாள், அவர்கள் தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருக்கிறார்கள் என்று நினைக்கின்றனர். ஆனால்
குழந்தைகள் செல்போன்களை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனிப்பதில்லை. எனவே பெற்றோர் தங்களது செல்போனில்
பொழுதுபோக்காக செல்போனில் விளையாடினாலும் சரி, குழந்தைகளுக்கு விளையாட கொடுத்தாலும் சரி இழப்பு அவர்களது குடும்பத்திற்கு என்பதை உணர வேண்டும்.

இதனால் பொதுமக்கள் தமிழக காவல்துறை சார்பில் அவ்வப்போது ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்தும் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்தல் குறித்தும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவற்றை அறிந்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனவே பெற்றோர்கள் ஆகிய நீங்களும் செல்போனில் விளையாடாதீர்கள் உங்கள்
குழந்தைகளையும், செல்போனில் விளையாட அனுமதிக்காதீர்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x