“கோர்ட் ஊழியர்களுக்கு போலீசார் தீபாவளிக்கு கொடுக்கும் பரிசும் லஞ்சமாகவே கருதப்படும்” – நீதிபதி அதிரடி

கோர்ட் ஊழியர்களுக்கு போலீசார் தீபாவளிக்கு பட்டாசு, இனிப்பு பார்சல், பரிசுப்பொருட்களை கொடுக்காதீர்கள் அது லஞ்சமாகவே கருதப்படும் என முதன்மை நீதிபதி லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி லோகேஸ்வரன், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.,ஜெயக்குமாருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: தீபாவளியின் போது போலீசார், கோர்ட் பணியாளர்களுக்கு பட்டாசு, இனிப்பு, பரிசுப்பொருட்களை வழங்குவது நடைமுறையில் இருப்பதாக அறிகிறேன். அவ்வாறு வழங்குவதும் லஞ்சம் என லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவுகளில் உள்ளது. எனவே மாவட்ட போலீசார் இனி அவ்வாறு பரிசுப்பொருட்கள் வழங்கவேண்டாம் என தெரிவியுங்கள். தங்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
மாவட்ட நீதிபதியின் இந்த கடிதம் போலீசார் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. போலீஸ் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் கூட இத்தகைய கட்டாய பரிசளிப்புகளை தவிர்க்கலாம். மற்ற துறையினரும் இதனை கடைப்பிடிக்கலாம்.