திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் நாயிடுபுரம் பகுதியை சார்ந்த மாணவி சண்முக பிரியா. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 11 ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் பள்ளிக்கூடத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக இணையத்தளம் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வகுப்புகளில் கலந்துகொண்டு மாணவி படிக்க இயலாமல் தவித்து வந்துள்ளார்.காரணம், அவரிடம் ஸ்மார்ட்போன் இல்லை. தனது தந்தையிடம் விஷயத்தை கூறி ஸ்மார்ட்போன் வாங்கி கேட்டுள்ளார். ஆனால் தற்போதையை ஏழ்மை சூழ்நிலையில் ஸ்மார்ட்போன் வாங்க இயலாது என்று தந்தை வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்த மாணவி வீட்டில் இருந்த தைலத்தை குடித்து உயிருக்கு அலறித்துடித்துள்ளார். இவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் பெற்றோர்கள் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
ஆனால் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரம்தான், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் என்ற மாணவனும், ஸ்மார்ட்போன் இல்லாததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.