“சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பில்லை!! அவர்கள் தேவை இல்லாதவர்கள்” – அமைச்சர் கே.சி.வீரமணி

சசிகலாவை எதிர்த்துதான் ஆட்சியும், கட்சியையும் முதல்வர் நடத்தி வருகிறார். அவரை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். வேலூரில், வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது:

சோளிங்கர் அரசு கலைக்கல்லூரி இந்தாண்டு தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் முதல்வர் தலைமையில் கல்லூரி தொடங்கப்படும். பத்திரப்பதிவுத் துறையில் 10 சதவீதம் தற்போது கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது.

சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பில்லை. அவர்களை எதிர்த்துதான் ஆட்சியும், கட்சியும் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் தேவை இல்லாதவர்கள். மக்களால் வெறுக்கப்படக்கூடியவர்கள் என்ற நிலையில்தான் முதல்வரும் உள்ளார். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x