“பாகிஸ்தானின் கராச்சியும் ஒருநாள் இந்தியாவின் அங்கமாகும்” கொக்கரிக்கும் தேவேந்திர பட்னவீஸ்!!

பாகிஸ்தானின் கராச்சியும் ஒருநாள் இந்தியாவின் அங்கமாகும் என மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.
மும்பையிலுள்ள பிரபல கராச்சி ஸ்வீட்ஸ் கடை உரிமையாளரை, கடையின் பெயரில் உள்ள கராச்சியை அகற்றி பெயரை மாற்ற வேண்டும் என சிவசேனை தலைவர் நிதின் தெரிவித்திருந்தார். இதுதொடர்பான வீடியோ கடந்த வாரம் வைரலாகி சர்ச்சையானது.
இதுபற்றி சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் நவம்பர் 19-ம் தேதி தெரிவிக்கையில், “கராச்சி பேக்கரி மற்றும் கராச்சி ஸ்வீட்ஸ் கடந்த 60 ஆண்டுகளாக மும்பையில் உள்ளன. அவர்களுக்கும் பாகிஸ்தானுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. பெயர் மாற்றக் கோரி கேட்பதில் அர்த்தமில்லை. பெயர் மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுப்புவது சிவசேனையின் நிலைப்பாடு அல்ல” என்றார்.
இதுகுறித்து தேவேந்திர ஃபட்னவீஸிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு செய்தியாளர்களிடம் கடந்த நவம்பர் 21-ம் தேதி பதிலளித்த அவர், “நாங்கள் அகண்ட பாரதத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். கராச்சியும் ஒருநாள் இந்தியாவின் அங்கமாகும் என்பதிலும் எங்களுக்கு நம்பிக்கையுள்ளது” என்றார்.