சென்னையில் இன்று மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்! விமான சேவை ரத்து!!

சென்னையில் மெட்ரோ ரயில்கள் இன்று வழக்கம் போல் இயங்கும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் காரணமாக ரயில், பேருந்து, ஆம்னி பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பேருந்துகள் இயங்காது.
அதே போல் புயல் காரணமாக சென்னையில் 24 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து தூத்துக்குடி, திருச்சி, பெங்களூரு, ஹூப்ளி, கோழிக்கோடு, மங்களூர், விஜயவாடா, கண்ணூர் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் அத்தியாவசிய துறைகள் தவிர மற்ற அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பால் விற்பனை, பெட்ரோல் நிலையங்கள் இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இருக்கும் எனவும், வழக்கம் போல் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும் என்றும், 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயங்கும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.