சிங்கப்பூரில் ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி

சிங்கப்பூரில் நேற்று நடந்த பார்லிமென்ட் தேர்தலில், ஆளும் பீப்பிள் ஆக் ஷன் கட்சி மொத்தமுள்ள 93 இடங்களில் 83 இடங்களை கைபற்றி, மீண்டும் ஆட்சியை பிடித்தது.
சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான பீப்பிள் ஆக் ஷன்’ கட்சியின் ஆட்சி நடக்கிறது. இவரது ஆட்சிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் உள்ளன. எனினும், முன்னதாகவே தேர்தலை அறிவித்தார் பிரதமர் லீ . சிங்கப்பூரில் நேற்று நடந்த பார்லி தேர்தலில், கொரோனா அச்சுறுத்தலையும் மீறி, மக்கள் ஆர்வமுடன் ஓட்டளித்தனர்.
ஓட்டு எண்ணிக்கை முடிவில், ஆளும் ‘பீப்பிள் ஆக் ஷன்’ கட்சி, மொத்தமுள்ள 93 இடங்களில், 83 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இக்கட்சி, 61.24 சதவீத ஓட்டு விகிதம் பெற்றது. இது கடந்த 2015ல் பெற்ற ஓட்டு விகிதத்தை (69.9%) விட குறைவு.
வெற்றிக்குப்பின் செய்தியாளர்களிடம் பிரதமர் லீ செய்ன் லுாங் கூறுகையில், “பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்ததற்கு அனைத்து மக்களுக்கும் நன்றி. ஓட்டு விகிதம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும், எங்கள் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு உள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.” என்றார்.