ஐபில் 2020:ஆறுதல் வெற்றியோடு விடைபெற்றது சென்னை!!!பஞ்சாபின் ப்ளே ஆஃப் கனவு கலைந்தது….

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமயிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு தீபக் ஹூடா 62* ரன்களும், ராகுல் 29 ரன்களும், மாயன்க் அகர்வால் 26 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 153 ரன்கள் எடுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் நிகிடி 3 விக்கெட்டுகளையும், தாகூர், தாஹிர் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான டூபிளசி 48 ரன்கள் எடுத்து கொடுத்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த கெய்க்வாட் மற்றும் அம்பத்தி ராயூடு கூட்டணி பஞ்சாப் அணியின் பந்துவீச்சை பொறுமையாக எதிர்கொண்டு ரன் குவித்ததன் மூலம் 18.5 ஓவரிலேயே இலக்கை எட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ருத்துராஜ் கெய்க்வாட் 62 ரன்களுடனும், அம்பத்தி ராயூடு 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் நடப்பு தொடரில் தனது 8வது தோல்வியை பதிவு செய்துள்ள பஞ்சாப் அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x