தமிழக அரசின் உதவாக்கரை இ-பாஸ் செயலி – மக்கள் கோபம்!

அத்யாவசிய தேவைகளுக்காக வெளியூர் செல்லும் மக்களுக்கு இ-பாஸ் கிடைப்பதை விரைவுப்படுத்துவதற்கு மாறாக, போலி இ-பாஸ் கண்டறியும் செயலியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்திற்கு உள்ளே, வெளியே செல்வதற்கு, ‘ஆன்லைன்’ வாயிலாக அனுமதி பெறும், ‘இ – பாஸ்’ முறை செயல்படுத்தப்படுகிறது. திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சைகளுக்கு மட்டும் இ – பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர, தொழில் துறையினருக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பலருக்கு, இ – பாஸ் கிடைப்பதில்லை. அரசு அதிகாரிகள் கமிஷனை எதிர்பார்த்து, எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக நிராகரிப்பதாக கூறப்படுகிறது. வேறுவழியில்லாமல், அரசு அதிகாரிகளுடன் கூட்டணியில் உள்ள புரோக்கர்களிடம் பணம் கொடுத்து இ-பாஸ் பெற்று செல்கின்றனர். அவை ஏராளமானவை போலி. இந்த நிலையில் இ – பாஸ்கள், அரசு வழங்கியதா என்பதை சரிபார்க்க, ‘வெரிபை டிஎன் இ – பாஸ்’ (Verify TN E-pass) என்ற, செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த செயலி வாயிலாக, யார் வேண்டுமானாலும், இ – பாஸ் உண்மை தன்மையை சரிபார்க்க முடியும். இது தொடர்பாக, போலீசாருக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியின் நிலை குறித்து அறிய அதன் பயனர்கள் கருத்துக்களை பார்த்தோம். 61 பேர் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். அதில் 90% பேர் இது ஒரு உதவாக்கரை செயலி, சரியாக ஸ்கேன் செய்யவில்லை, மோசமான செயலி, குப்பை செயலி என்ற கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
1
0
Would love your thoughts, please comment.x
()
x