ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்த முகேஷ் அம்பானி!

இந்தியா மற்றும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் கொரோனா ஊரடங்கு போடப்பட்ட சமயத்தில் இருந்து சரிவை சந்தித்த முகேஷ் அம்பானி தற்போது மீண்டும் விட்ட இடமான நம்பர் 1-க்கு வந்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்து வந்தார் முகேஷ் அம்பானி. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால் அவர் முதலிடத்தை சில மாதங்களுக்கு முன் பறிகொடுத்தார். இந்த நிலையில் மே மாதம் தொடங்கி ஜூலை வரை டிஜிட்டல் நிறுவனமான ஜியோவின் 24.17 சதவீத பங்குகளை விற்று, அதன் மூலம் ரூ.1.15 லட்சம் கோடி நிதி திரட்டினார்.
இதனால் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு மளமளவென உயர்ந்தது. பங்கு சந்தைகளிலும் அவரது பங்கு மதிப்புகள் உச்சத்தை தொட்டன. இதன் காரணமாக அம்பானியின் சொத்த மதிப்பு 28 பில்லியன் டாலர் உயர்ந்து, மொத்தம் 68.3 பில்லியன் டாலர் ஆனது. இது இந்திய மதிப்பில் இது ரூ.4.9 லட்சம் கோடியாகும்.
இதனால், இந்தியா மற்றும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார். மேலும், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 8-வது இடத்திற்கு வந்துள்ளார். தற்போது கடனில்லாத நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனம் மாறியுள்ளது.