போலீஸ் எச்சரிக்கை..! பிரதமரின் பேரில் உலாவும் மோசடி கும்பல்

பிரதமர் கொரோனா நிவாரணமாக ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிற்கும் ரூ.4,500 தருவதாகக் கூறி, உங்களது வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கும்பலிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது கொரோனா நிவாரணமாக பிரதமர் அனைவருக்கும் ரூ.4,500 நிதி வழங்குகிறார். உங்களது வங்கியின் விவரங்களைக் கூறுங்கள் எனக் கேட்டு டெபிட் கார்டு விவரங்கள் வரை அனைத்தையும் வாங்குகின்றனர். இதுபோன்று தொடர் அழைப்புகள் தமிழகத்தில் வந்துக்கொண்டிருக்கிறது.
பலர் இதுகுறித்து சைபர்கிரைம் போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுபோன்று ஏராளமான நபர்கள் தொடர்ந்து பேசுகின்றனர். தற்போது பெண்களும் பேசுகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே போல் பேசுவதால், ஒரே கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் போலிசார் சந்தேகிக்கின்றனர்.
எனவே இதுபோன்று யாரும் அழைத்தால், அதை நம்பவேண்டாம், அவர்களிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.