செய்தியாளரைத் தாக்கிய அதிமுக நிர்வாகி..!

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட்டில் நடைபெற்று வரும் அதிமுக கூட்டத்தில் ஒரு பிரிவினர் சலசலப்புடன் வெளியேறி சென்றனர், அதனை செய்தி சேகரித்த செய்தியாளர் பிரதீப் படம்பிடிக்கும் போது அதிமுக நிர்வாகி ஒருவர் ஒருமையில் பேசி அவரைத் தாக்கி உள்ளார்.
இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அதிமுக நிர்வாகியின் இந்த செயலுக்கு பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், செய்தியாளரை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்து, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக பத்திரிகையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.