கிராமசபை கூட்டங்களுக்கு தடை: வைகோ கண்டனம்!

கிராமசபை கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது எடப்பாடி அரசின் எதேச்சதிகாரம் என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக நடத்தும் கிராம சபை கூட்டங்கள் சிறப்பாக நடந்து வருவதை பொறுக்க முடியாமல் தமிழக அரசு தடை செய்துள்ளது எனக் குற்றம்சாட்டிய வைகோ, தமிழக அரசின் நிர்வாக அலட்சியத்தால் ஊராட்சி பணிகளில் தேக்கநிலை ஏற்பட்டு அடிப்படை தேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கிராமசபை கூட்டங்கள் நடப்பதை தடுக்க அதிமுக அரசு போடும் தடைகள் நொறுங்கும் என்று கூறியுள்ளார்
சட்டப்படி ஊராட்சிகளுக்கு வழங்கவேண்டிய மத்திய அரசின் நிதியை தமிழக அரசு பெற்று தரவில்லை என்றும் அவர் புகார் கூறியுள்ளார்.