
இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் பெண்களின் புகைப்படங்களை டவுன்லோட் செய்து, பின்னர் மார்பிங் செய்து, 100க்கும் அதிகமான பெண்களை பிளாக்மெயில் செய்து பணப்பறித்துவந்த ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் சுமித் ஜா என அடையாளம் காணப்பட்டுள்ள 26 வயதான அந்த நபர், தொடர்ந்து பல பெண்களிடம் இது போன்ற மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாக்களில் வெளியிடுவதாக மிரட்டி பண மோசடியில் ஈடுபட்டுவந்துள்ளார்.
சமீபத்தில், ஒரு பெண் வங்கி மேலாளர், தொடர்ந்து தனது புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டு, பணம் கேட்டு மிரட்டி வந்ததாக அளித்த புகாரைத் தொடர்ந்து, இந்த ஆசாமியின் செய்து வந்த செயல்கள் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
சுமித் ஜா மீது பலப் பிரிவுகளின் கீழ் வழக்குக்கள் பதியப்பட்டுள்ளது. மேலும், அவர் ஏற்கெனவே 2018ல் சத்தீஸ்கார் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களில் வெவ்வேறு வழக்குகளில் கைதானவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 2018-ஆம் ஆண்டில் மட்டும் சைபர் பிளாக்மெயில் குற்றங்களில் 220-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பின் கீழ் வரும் தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது.
nadru